டென்னிஸ்

சர்வதேச டென்னிஸ் போட்டி கால்இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி + "||" + International Tennis Tournament Venus Williams at the Quater final The shock has failed

சர்வதேச டென்னிஸ் போட்டி கால்இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

சர்வதேச டென்னிஸ் போட்டி கால்இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

கலிபோர்னியா,

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலக தரவரிசையில் 50–வது இடத்தில் உள்ள மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4–6, 6–7 (2–7) என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 38 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 2 செட்டிலும் முதலில் முன்னிலை பெற்றாலும் அதனை கடைசி வரை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இந்த ஆட்டம் 1 மணி 43 நிமிடம் நடந்தது. அரைஇறுதியில் மரியா சக்காரி, அமெரிக்க வீராங்கனை டானிலே காலின்சை சந்திக்கிறார்.