டென்னிஸ்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் ரபெல் நடால் 3-வது சுற்றுக்கு தகுதி + "||" + Rogers Cup tennis Rabel Nadal Qualifying for the 3rd round

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் ரபெல் நடால் 3-வது சுற்றுக்கு தகுதி

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் ரபெல் நடால் 3-வது சுற்றுக்கு தகுதி
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. ரபெல் நடால் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
டோராண்டோ,

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பெனோய்ட் பேர்ரை (பிரான்ஸ்) எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), மரின் சிலிச் (குரோஷியா), ஜோகோவிச் (செர்பியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி கண்டு 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஷரபோவா (ரஷியா) 6-0, 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை டாரியா கசட்கினாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோர் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
2. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ரபெல் நடால், சிமோனா ஹாலெப் ‘சாம்பியன்’
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்கள்.
3. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், சிட்சிபாஸ்
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ‘இளம் புயல்’ சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
4. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
5. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.