டென்னிஸ்

தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடக்கிறது + "||" + The national junior tennis tournament is in Chennai

தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடக்கிறது

தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடக்கிறது
தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட உள்ளது.
சென்னை,

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) சார்பில், அடிடாஸ் நிறுவனம் ஆதரவுடன் 26-வது தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி (18 வயதுக்கு உட்பட்டோர்) சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி எம்.சி.சி., ஜிம்கானா கிளப், காஸ்மோபாலிட்டன் கிளப் மைதானங்களில் வருகிற 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தகுதி சுற்று ஆட்டங்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. ஆண்கள் பிரிவில் 136 வீரர்களும், பெண்கள் பிரிவில் 104 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு ரூ.1 லட்சத்துக்கு ஸ்பான்சர்ஷிப்பும், 2-வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு ஸ்பான்சர்ஷிப்பும் வழங்கப்படும்.