ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி


ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 8:50 PM GMT)

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

டோராண்டோ,

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரும், விம்பிள்டன் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெபோனஸ் சிட்சிபாஸ்சை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் ஜோகோவிச் 3-6, 7-6 (7-5), 3-6 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ஜோகோவிச்சை வீழ்த்திய பிறகு 19 வயதான சிட்சிபாஸ் அளித்த பேட்டியில், ‘எந்தவொரு இளம் வீரருக்கும் ஜோகோவிச்சை போன்ற வீரர்களை வீழ்த்த வேண்டும் என்ற கனவு இருக்கும். எனது டென்னிஸ் வாழ்க்கையில் இது மிகச் சிறந்த தருணம்.’ என்றார். மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-5, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) விரட்டினார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஷரபோவா (ரஷியா) 3-6, 2-6 என்ற நேர்செட்டில் 6-ம் நிலை வீராங்கனையான கரோலினா கார்சியாவிடம் (பிரான்ஸ்) மண்ணை கவ்வினார்.


Next Story