டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2–வது சுற்றில் பெடரர், ‌ஷரபோவா + "||" + American Open Tennis: Federer, Sharapova in the 2nd round

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2–வது சுற்றில் பெடரர், ‌ஷரபோவா

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2–வது சுற்றில் பெடரர், ‌ஷரபோவா
அமெரிக்க ஓபன் டென்னிசில் ரோஜர் பெடரர், ‌ஷரபோவா ஆகியோர் 2–வது சுற்றுக்கு முன்னேறினர்.

நியூயார்க், 

அமெரிக்க ஓபன் டென்னிசில் ரோஜர் பெடரர், ‌ஷரபோவா ஆகியோர் 2–வது சுற்றுக்கு முன்னேறினர்.

பெடரர்–ஜோகோவிச்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 2–வது நாளான நேற்று இந்திய நேரப்படி அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–2, 6–2, 6–4 என்ற நேர் செட்டில் நிஷியாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். பெடரர் அடுத்து பிரான்சின் பெனோய்ட் பேரை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச் (செர்பியா) 6–3, 3–6, 6–4, 6–0 என்ற செட் கணக்கில் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார்.

அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), மரின் சிலிச் (குரோஷியா), நிஷிகோரி (ஜப்பான்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), காரெனோ பஸ்தா (ஸ்பெயின்) உள்ளிட்ட முன்னணி வீரர்களும் முதல்தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

‌ஷரபோவா

பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 7–6 (5), 6–3 என்ற நேர் செட் கணக்கில் மார்கரிட்டா காஸ்பர்யனை (ரஷியா) 1 மணி 45 நிமிடங்கள் போராடி விரட்டியடித்தார். இதே போல் முன்னாள் சாம்பியன் மரிய ‌ஷரபோவா (ரஷியா) 6–2, 7–6 (6) என்ற நேர் செட் கணக்கில் 39 வயதான பட்டி ஷின்டரை (சுவிட்சர்லாந்து) சாய்த்து 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் சாம்பியனான மோனிகா பிய்க் (பியூர்டோரிகோ), தன்னை எதிர்த்த ஸ்டெபானி வோஜிலிக்கு (சுவிட்சர்லாந்து) எந்த ஒரு கேமையும் விட்டுக்கொடுக்காமல் 6–0, 6–0 என்ற நேர் செட் கணக்கில் துவம்சம் செய்தார்.

பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), வோஸ்னியாக்கி (டென்மார்க்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), சிபுல்கோவா (சுலோவக்கியா) உள்ளிட்டோரும் 2–வது சுற்றை எட்டினர்.தொடர்புடைய செய்திகள்

1. சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர் வெளியேற்றம் வடகொரியா முடிவு
சீனாவில் இருந்து கடந்த மாதம் 16–ந் தேதி, வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த ஒரு அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் லாரன்ஸ் புரூஸ் பைரன் என தெரிய வந்தது.
2. அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் : டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.
3. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு?
அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது.
4. ரகசியமாக 16 அணு ஆயுத மையங்களை செயல்படுத்தி வரும் வடகொரியா
வடகொரியா ரகசியமாக 16 அணு ஆயுத சோதனை மையங்களை செயல்படுத்தி வருவதாக அமெரிக்க செயற்கைகோள்கள் சுட்டிக்காட்டுகின்றன.
5. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காட்டுத்தீயினால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் அதிருப்தி தெரிவித்தார்.