டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3–வது சுற்றில் பெடரர், கிவிடோவா வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி + "||" + American Open Tennis: Federer in the 3rd round, Kiwitova

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3–வது சுற்றில் பெடரர், கிவிடோவா வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3–வது சுற்றில் பெடரர், கிவிடோவா வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், கிவிடோவா 3–வது சுற்றுக்கு முன்னேறினர். 2–ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், கிவிடோவா 3–வது சுற்றுக்கு முன்னேறினர். 2–ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

பெடரர்–ஜோகோவிச்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 4–வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7–5, 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் பெனோய்ட் பேரை தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6–1, 6–3, 6–7 (2), 6–2 என்ற செட் கணக்கில் சான்ட்கிரினை (அமெரிக்கா) வீழ்த்தினார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), நிஷிகோரி (ஜப்பான்), மரின் சிலிச் (குரோஷியா), கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), ஸ்வார்ட்ஸ்மான் (அர்ஜென்டினா) ஆகியோரும் 2–வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

வோஸ்னியாக்கி வெளியேற்றம்

பெண்கள் ஒற்றையரில் 2–ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் 4–6, 2–6 என்ற நேர் செட் கணக்கில் 36–ம் நிலை வீராங்கனை சுரெங்கோவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார்.

தரவரிசையில் 5–வது இடம் வகிக்கும் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா 7–5, 6–3 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் யபான் வாங்கை விரட்டினார். இதே போல் விம்பிள்டன் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), மரிய ‌ஷரபோவா (ரஷியா), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் 3–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

இந்தியர்கள் தோல்வி

ஆண்கள் இரட்டையரில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)–ஜாமி செரிட்டானி (அமெரிக்கா), ஜீவன் நெடுஞ்செழியன் (இந்தியா)– டெனிஸ் இஸ்தோமின் (உஸ்பெகிஸ்தான்), கலப்பு இரட்டையரில் ரோகன் போபண்ணா (இந்தியா)– லாரா சீஜ்மன்ட் (ஜெர்மனி) ஆகிய ஜோடிகள் தங்களது முதல் சுற்றில் தோல்வி கண்டு நடையை கட்டின.

ஓய்வு எப்போது? பெடரர் பதில்

20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் 37 வயதான ரோஜர் பெடரரிடம் ஓய்வு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘கடந்த 9 ஆண்டுகளாக என்னிடம் ஓய்வு குறித்து கேள்வியை கேட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்பது தான் தெரியவில்லை. முதலில் எனது குடும்பத்தினரிடம் ஆலோசித்த பிறகே எந்த முடிவுக்கும் வர முடியும். குடும்பத்தினர் மற்றும் பயிற்சி குழுவினர் ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம் என்று நினைத்து, நானும் அந்த உணர்வுக்கு வந்தால் அப்போது ஓய்வு பெறுவது குறித்து வெளிப்படையாக தெரிவிப்பேன். ஆனால் இப்போதைக்கு டென்னிசில் இருந்து விலகும் எண்ணம் இல்லை’ என்றார்.