டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி + "||" + American Open tennis: Serena Williams qualifies for 4th round

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ச் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். #USOpen2018
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் 6 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவரான தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை எதிர் கொண்டார்.


ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அசரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் ஜோகோவிச் ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா முன்னாள் சாம்பியன் செரீனாவை நேர் செட்டில் தோற்கடித்து முதல்முறையாக பட்டத்தை தட்டிச்சென்றார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-டெல்போட்ரோ
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், டெல்போட்ரோ ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் காயம் காரணமாக அரைஇறுதியில் பாதியில் விலகினார்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் அவர் செரீனா வில்லியம்சுடன் இன்று மோத இருக்கிறார்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், நிஷிகோரி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.