டென்னிஸ்

சானியா மிர்சாவிடம் அத்துமீறல்: கிரிக்கெட் வீரர் மீது கணவர் சோயிப் மாலிக் புகார் + "||" + Sania Mirza eve-teased by Bangladesh cricketer Sabbir Rahman, claims Shoaib Malik

சானியா மிர்சாவிடம் அத்துமீறல்: கிரிக்கெட் வீரர் மீது கணவர் சோயிப் மாலிக் புகார்

சானியா மிர்சாவிடம் அத்துமீறல்: கிரிக்கெட் வீரர் மீது கணவர் சோயிப் மாலிக் புகார்
சானியா மிர்சாவிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் மீது கணவர் சோயிப் மாலிக் புகார் தெரிவித்துள்ளார்.
டாக்கா,

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவிடம், பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டதாக, சானியாவின் கணவர் சோயிப் மாலிக் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்ட சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். மேலும் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றவர் சானியா மிர்சா.

இவர், கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சானியா மிர்சாவிடம் அத்துமீறி  நடந்து கொண்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் மீது சோயிப் மாலிக், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளார்.

அதில், கடந்த 4 வருடத்துக்கு முன் என் மனைவி சானியா மிர்சாவுடன் பங்களாதேஷில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது சபீர் ரஹ்மான் எனது மனைவியிடம் அத்துமீறி நடக்க முயன்றார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இதுபற்றிபங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியில் சபிர் ரஹ்மான் மிகவும் சர்ச்சைக் குரிய வீரர் எனப் பெயரெடுத்தவர். 26 வயதான சபிர் ரஹ்மான் கடந்த சில மாதங்களுக்கு முன் மைதானத்துக்கு வெளியே ரசிகர் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில் சில வாரங்கள் சஸ்பெண்ட் செய்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. அதன்பின் பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதால், சபீர் ரஹ்மான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர், இதையடுத்து இவர் மீது 6 மாதங்கள் வரை தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டியின் போது ஹோட்டலுக்கு அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி பெண் ஒருவரை அழைத்துவந்த புகாரில் சபிர் ரஹ்மானுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தமும் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே சானியா மிர்சாவிடம் அத்துமீறி நடக்க முயன்றதாக அவரின் கணவர் சோயிப் மாலிக் புகார் அளித்துள்ள நிலையில், குற்றம் உண்மையானதாக இருந்தால், சபீர் ரஹ்மானுக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்படலாம் என்று வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சச்சினின் சர்வதேச சாதனையை முறியடித்த நேபாள இளம் கிரிக்கெட் வீரர்
சச்சின் தெண்டுல்கரின் சர்வதேச சாதனையை நேபாள நாட்டின் இளம் கிரிக்கெட் வீரர் ரோஹித் பாவ்டெல் முறியடித்து உள்ளார்.
2. பெண்மையின் வலிமையை பிரசவத்தில் உணர்ந்தேன் - சானியா மிர்சா
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதக்கங்களை குவிப்பவர். தற்போது தாய்மையின் பரிசான குழந்தையை பெற்றெடுத்து அதனுடன் புதிய வாழ்க்கை அனுபவங்களை பெற்றுக்கொண்டிருக்கிறார்.
3. சானியா மிர்சாவுக்கு பிறந்த ஆண் குழந்தையின் பெயர் “இஜான்”
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு இஜான் என பெயரிடப்பட்டுள்ளது.
4. பாகிஸ்தான் அணியின் உடை அணிந்து இந்தியக் கொடி ஏந்துவேன்- சானியா மிர்சா
இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களிடம் பரபரப்பு பற்றிக் கொள்ளும். கூடவே இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் ஆதரவு எந்த அணிக்கு என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு தீனி போடும் விஷயமாக மாறிவிடும்.
5. வரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது மனைவி புகார்
வரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.