டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; கலப்பு இரட்டையர் பிரிவில் முர்ரே, மேட்டிக் இணை வெற்றி + "||" + Murray, Mattek-Sands win US Open mixed doubles

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; கலப்பு இரட்டையர் பிரிவில் முர்ரே, மேட்டிக் இணை வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; கலப்பு இரட்டையர் பிரிவில் முர்ரே, மேட்டிக் இணை வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் முர்ரே, மேட்டிக் இணை வெற்றி பெற்றுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இங்கிலாந்து நாட்டின் ஜேமி முர்ரே மற்றும் அமெரிக்காவின் பெத்தனி மேட்டிக்-சாண்ட்ஸ் இணையை எதிர்த்து, குரோஷியாவின் நிகோலா மெக்டிக் மற்றும் போலந்தின் அலிக்ஜா ரொசால்ஸ்கா இணை விளையாடியது.

இந்த போட்டியில் முர்ரே மற்றும் பெத்தனி இணை 2-6, 6-3, 11-9 என்ற செட் கணக்கில் நிகோலா மற்றும் அலிக்ஜா இணையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கடந்த வருடம் மார்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து விளையாடி முர்ரே வெற்றி பெற்றார்.  இந்த நிலையில் இந்த வருடமும் போட்டியில் முர்ரே வெற்றி பெற்றுள்ளார்.  கடந்த 2003-04ம் ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ச்சியாக 2 முறை பட்டங்களை வென்ற பாப் பிரையனுக்கு பின் இந்த சாதனையை முர்ரே படைத்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு விம்பிள்டன் பட்ட போட்டியில் முழங்கால் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மேட்டிக்கிற்கு இந்த வெற்றி மகிழ்ச்சியை அளித்துள்ளது.