டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் பெற்றார் ஜோகோவிச் + "||" + Novak Djokovic wins third US Open, equals Pete Sampras on 14 Grand Slams

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் பெற்றார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் பெற்றார் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதிப்போட்டியில் டெல்போட்ரோவை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் பெற்றார். #NovakDjokovic
நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர்  பிரிவின் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். கடந்த 2009-ம் ஆண்டு சாம்பியனான டெல்போட்ரோ அதன் பிறகு தற்போது தான் இறுதிப்போட்டியில் முன்னேறி இருக்கிறார்.

விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3 7-6(4) 6-3 என்ற நேர்செட் கணக்கில் டெல்போட்ரோவை தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் 14-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் பெற்றிருக்கும் ஜோகோவிச், பெடே சாம்ப்ராஷ் சாதனையை சமன் செய்தார். 

முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா மற்றும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.