டென்னிஸ்

இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ராஜா-ஜுனைத் இணை முன்னேற்றம் + "||" + Amex-Istanbul Challenger: Raja-Junaid sail into men's doubles final

இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ராஜா-ஜுனைத் இணை முன்னேற்றம்

இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ராஜா-ஜுனைத் இணை முன்னேற்றம்
இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராஜா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜுனைத் இணை இறுதி போட்டிக்கு முன்னேறியது.

சண்டிகார்,

இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூரவ் ராஜா மற்றும் ஆஸ்திரேலியாவின் ரமீஸ் ஜுனைத் இணை, ரஷ்யாவின் மிகைல் எல்ஜின் மற்றும் பெலாரசின் யாரஸ்லாவ் ஷைலா இணையை எதிர்த்து விளையாடியது.

இந்த போட்டியை 6-2, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் ராஜா மற்றும் ஜுனைத் இணை வென்றது.  இப்போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 19 நிமிடங்கள் நீடித்தது.

ராஜா மற்றும் ஜுனைத் இணை முதல் செர்வீசில் 81 சதவீத (25/31) வெற்றியை பெற்றது.  இதேபோன்று எல்ஜின் மற்றும் ஷைலா இணை முதல் செர்வீசில் 71 சதவீத (25/35) வெற்றியை பெற்றது.