டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் இந்தியா தோல்வி + "||" + Davis Cup Tennis: India failed to doubles

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் இந்தியா தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் இந்தியா தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடந்து வருகிறது.

கிரால்ஜெவோ, 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடந்து வருகிறது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வியை தழுவினர்.

2–வது நாளான நேற்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– சகெத் மைனெனி ஜோடி 6–7 (5), 2–6, 6–7 (4) என்ற செட் கணக்கில் போதிய அனுபவம் இல்லாத செர்பியாவின் நிகோலா மிலோஜெவிச்– டேனிலோ பெட்ரோவிச் இணையிடம் வீழ்ந்தது. இதன் மூலம் இந்த போட்டியை இந்தியா 0–3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனால் இன்று நடக்கும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ஆனாலும் புதிய விதிமுறைப்படி இந்திய அணி இன்னும் டேவிஸ் கோப்பை பிரதான சுற்றை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி மாதம் நடக்கும் இதற்கான தகுதி சுற்றில் இந்திய அணி அடுத்து விளையாடும்.