டென்னிஸ்

பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஒசாகா- பிளிஸ்கோவா + "||" + Pacific Open Tennis: Osaka-Blisskova in final

பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஒசாகா- பிளிஸ்கோவா

பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஒசாகா- பிளிஸ்கோவா
பசிபிக் ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் ஒசாகா, பிளிஸ்கோவா ஆகியோர் மோத உள்ளனர்.
டோக்கியோ,

பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-3 என்ற நேர் செட்டில் கமிலா ஜியார்கியை (இத்தாலி) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஒசாகா தொடர்ச்சியாக பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். மற்றொரு அரைஇறுதியில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டோனா வெகிச்சை வீழ்த்தினார். இன்று நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஒசாகா-பிளிஸ்கோவா மோதுகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...