டென்னிஸ்

ஷாங்காய் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர் + "||" + Shanghai Tennis: Federer in the 3rd round

ஷாங்காய் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர்

ஷாங்காய் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர்
ஷாங்காய் டென்னிஸ் போட்டியில், ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் 22-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெட்விடேவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) 7-5, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை சாய்த்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ஜார்ஜியா வீரர் நிகோலோஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.