டென்னிஸ்

ஷாங்காய் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + Shanghai Open Tennis Djokovic Quarter improvement

ஷாங்காய் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஷாங்காய் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டி ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் (செர்பியா), 21-ம் நிலை வீரரான மார்கோ செச்சினாட்டோவை (இத்தாலி) எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-0 என்ற நேர்செட்டில் மார்கோ செச்சினாட்டோவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 33-ம் நிலை வீரரான அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), நிஷிகோரி (ஜப்பான்), கைல் எட்முன்ட் (இங்கிலாந்து) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
2. இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா வெளியேற்றம்
இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஒசாகா ஆகியோர் வெளியேறினர்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கிவிடோவா-ஒசாகா ஆண்கள் ஒற்றையரில் நடால் அபாரம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிவிடோவா, ஒசாகா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் நடாலும் இறுதி சுற்றை எட்டியிருக்கிறார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.