டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வோஸ்னியாக்கி போராடி வெற்றி + "||" + Women's tennis championship: wozniacki struggling to win

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வோஸ்னியாக்கி போராடி வெற்றி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வோஸ்னியாக்கி போராடி வெற்றி
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வோஸ்னியாக்கி போராடி வெற்றிபெற்றார்.
சிங்கப்பூர்,

டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ‘ஒயிட்’ பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த நடப்பு சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். இந்த ஆட்டம் 2 மணி 19 நிமிடங்கள் நீடித்தது. 2-வது தோல்வியை தழுவிய கிவிடோவா இனி அடுத்த சுற்றை எட்டுவது கடினம் தான். மற்றொரு ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு ஸ்டீபன்ஸ், பெர்டென்ஸ் தகுதி
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ரெட்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன.
2. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வோஸ்னியாக்கியை வெளியேற்றினார், ஸ்விடோலினா
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.