துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 24 Oct 2018 10:15 PM GMT (Updated: 24 Oct 2018 9:59 PM GMT)

சர்வதேச சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

* ஓமனில் நடந்து வரும் 5-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதியது. இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது. இந்தியா 3 வெற்றி, ஒரு டிரா என்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

* சிங்கப்பூரில் நடந்து வரும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று ‘ரெட்’ பிரிவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகாவை (ஜப்பான்) வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றார். 2-வது தோல்வியை தழுவிய ஒசாகாவுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

* சென்னை எழும்பூரில் நடந்து வரும் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த தெற்கு ரெயில்வே-இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அணிகள் இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

* சர்வதேச சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் எகிப்து வீரர் முகமது சப்வாத்தை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். அதே சமயம் மற்ற இந்திய வீரர்கள் ராம்குமார், சுமித் நாகல் தோல்வி கண்டு வெளியேறினர்.

* பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் கவாகாமியை (ஜப்பான்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகியோர் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

* சிட்டகாங்கில் நேற்று நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 247 ரன்கள் இலக்கை தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டான் தாஸ் (83 ரன்), இம்ருல் கேயஸ் (90 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காளதேச அணி 44.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.


Next Story