டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்:அரைஇறுதிக்கு ஸ்டீபன்ஸ், பெர்டென்ஸ் தகுதி + "||" + Women's tennis championship: Stephens, Bertren's qualification for the semi-final

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்:அரைஇறுதிக்கு ஸ்டீபன்ஸ், பெர்டென்ஸ் தகுதி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்:அரைஇறுதிக்கு ஸ்டீபன்ஸ், பெர்டென்ஸ் தகுதி
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ரெட்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன.
சிங்கப்பூர், 

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ரெட்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. கிகி பெர்டென்சுக்கு (நெதர்லாந்து) எதிராக களம் இறங்கிய அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தார். காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஒசாகா வலி அதிகமாக இருந்ததால் அத்துடன் கண்ணீர் மல்க போட்டியில் இருந்து விலகினார். இதனால் பெர்டென்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் விம்பிள்டன் சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பருக்கு (ஜெர்மனி) அதிர்ச்சி அளித்தார். ‘ரெட்’ பிரிவில் ஸ்டீபன்ஸ் (3 வெற்றி), பெர்டென்ஸ் (2 வெற்றி, ஒரு தோல்வி) அரைஇறுதியை எட்டினர். கெர்பர் (ஒரு வெற்றி, 2 தோல்வி), ஒசாகா (3 தோல்வி) நடையை கட்டினர். அரைஇறுதி ஆட்டங்களில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ், செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவையும், உக்ரைன் ‘புயல்’ ஸ்விடோலினா, கிகி பெர்டென்சையும் சந்திக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வோஸ்னியாக்கியை வெளியேற்றினார், ஸ்விடோலினா
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
2. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வோஸ்னியாக்கி போராடி வெற்றி
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வோஸ்னியாக்கி போராடி வெற்றிபெற்றார்.