டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் ஸ்விடோலினா, ஸ்டீபன்ஸ் + "||" + Women's tennis championship: Swidolina, Stephens at the finals

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் ஸ்விடோலினா, ஸ்டீபன்ஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் ஸ்விடோலினா, ஸ்டீபன்ஸ்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

சிங்கப்பூர், 

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் உக்ரைனின் ஸ்விடோலினா 7–5, 6–7 (5), 6–4 என்ற செட் கணக்கில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரைஇறுதியில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவாவுடன் (செக்குடியரசு) மல்லுகட்டினார். இதில் முதல் 8 கேம்களை வரிசையாக கைப்பற்றிய பிளிஸ்கோவா எளிதில் வெற்றி காணுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ஸ்டீபன்ஸ் எழுச்சி பெற்று மிரள வைத்தார். 1 மணி 55 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஸ்டீபன்ஸ் 0–6, 6–4, 6–1 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ்– ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கத்தார், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: பாவ்டிஸ்டா, நிஷிகோரி சாம்பியன்
கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது.
2. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் போபண்ணா ஜோடி ‘சாம்பியன்’ ஒற்றையர் பிரிவில் ஆண்டர்சனுக்கு பட்டம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா–திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
3. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது.
4. மராட்டிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் போபண்ணா ஜோடி பெயஸ் இணையை வீழ்த்தியது
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.
5. மராட்டிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஆண்டர்சன், சிமோன்
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது.