டென்னிஸ்

மும்பை டென்னிஸ்: லிசிக்கி அதிர்ச்சி தோல்வி + "||" + Mumbai Tennis: Lychee shock Failure

மும்பை டென்னிஸ்: லிசிக்கி அதிர்ச்சி தோல்வி

மும்பை டென்னிஸ்: லிசிக்கி அதிர்ச்சி தோல்வி
மும்பை டென்னிஸ் போட்டியில் சபினே லிசிக்கி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

மும்பை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது.

இதில் முதல் சுற்றில் ஜெர்மனி முன்னணி வீராங்கனையும், விம்பிள்டனில் இறுதி சுற்று வரை முன்னேறியவருமான சபினே லிசிக்கி, ஜப்பானின் நாவ் ஹிபினோவை சந்தித்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஹிபினோ 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் லிசிக்கிக்கு அதிர்ச்சி அளித்தார். இன்னொரு ஆட்டத்தில் சபினா ஷரிபோவா (உஸ்பெகிஸ்தான்) 6-1, 7-6 என்ற நேர் செட்டில் மிசாகி டோயை (ஜப்பான்) விரட்டினார்.


இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர் தாண்டி, பிரஞ்சலா ஆகியோர் இன்று தங்களது முதல் சுற்றில் ஆட உள்ளனர்.