துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 31 Oct 2018 9:30 PM GMT (Updated: 31 Oct 2018 6:54 PM GMT)

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.

* இந்திய குத்துச்சண்டை வீராங்கனை 35 வயதான மேரிகோம் கூறும் போது, ‘இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை பந்தயத்தில் 48 கிலோ எடைப்பிரிவு இல்லை என்பதால் 51 கிலோவுக்கு மாற வேண்டி இருக்கும்’ என்றார்.

* 2026-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 32-ல் இருந்து 48 ஆக உயர்த்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் அதற்கு முன்பாக 2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கும் உலக போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், உயர்த்துவதற்கு சாத்தியம் இருப்பதாகவும் சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் (பிபா) தலைவர் கியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.

* முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளருமான நுவான் ஜோய்சா, ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

* மும்பை ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீராங்கனை கர்மான் கவுர் தாண்டி தனது முதல் சுற்றில் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் சாய்சாய் ஜெங்கிடம் (சீனா) பணிந்தார். இதே போல் இந்தியாவின் பிரஞ்சலா 6-3, 5-7, 1-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் லுக்சிகா கும்குமிடம் வீழ்ந்தார்.

* பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-1 என்ற நேர்செட்டில் ஜோவ் ஜோசாவை (போர்ச்சுகல்) விரட்டியடித்தார். பெடரர் (சுவிட்சர்லாந்து), மரின் சிலிச் (குரோஷியா), நிஷிகோரி (ஜப்பான்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோரும் 3-வது சுற்றை எட்டினர்.

* அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புனேயில் நடக்கும் மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதை தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் உறுதி செய்துள்ளார். 32 வயதான ஆண்டர்சன், உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கிறார்.


Next Story