டென்னிஸ்

ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டி; தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி + "||" + Tamil Nadu's Fahad Mohammed wins tennis title

ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டி; தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி

ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டி; தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி
மும்பையில் நடந்த ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டியில் தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி பெற்றுள்ளார்.
மும்பை,

மும்பையில் ஜே.எஸ். பெரேரா நினைவு ஏ.ஐ.டி.ஏ. தரவரிசை ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டியில் தமிழகத்தின் பஹத் முகமது மற்றும் மகாராஷ்டிராவின் அதர்வா சர்மா விளையாடினர்.

இந்த போட்டியில் 22 வயது நிறைந்த முகமது 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 18 வயது நிறைந்த அதர்வாவை வீழ்த்தி பட்டத்தினை வென்றுள்ளார்.

சென்னையில் உள்ள டென்னிஸ் அகாடெமி ஒன்றில் பயிற்சி பெற்றவரான முகமது முதல் செட்டை 45 நிமிடங்களில் கைப்பற்றினார்.  தொடர்ந்து 2வது செட்டை 32 நிமிடங்களில் வென்று பட்டத்தினை தட்டி சென்றார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற முகமது ரூ.26 ஆயிரம் பரிசு தொகை மற்றும் கோப்பையும், 2வது இடம் பிடித்த அதர்வா ரூ.18 ஆயிரம் பரிசு தொகையும் பெற்றனர்.

முகமது மற்றும் அதர்வா ஆகியோர் ஏ.ஐ.டி.ஏ. தரவரிசையில் முறையே 30 மற்றும் 22 புள்ளிகளை பெற்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ - விராட் கோலி கருத்து
‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
2. உலக கோப்பை ஆக்கியில் வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி; 5-0 கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
3. புரோ கபடி: புனே அணி ‘திரில்’ வெற்றி
புரோ கபடியில், அரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
4. மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
5. 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா அபார வெற்றி: “மந்தனாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது கடினம்” - ஆஸ்திரேலிய கேப்டன் லானிங்
இந்திய வீராங்கனை மந்தனாவின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் லானிங் கூறியுள்ளார்.