டென்னிஸ்

ஏ.டி.பி. டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கினார், ஜோகோவிச் + "||" + ATP Tennis: Started with success, Djokovich

ஏ.டி.பி. டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கினார், ஜோகோவிச்

ஏ.டி.பி. டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கினார், ஜோகோவிச்
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை ஜோகோவிச் வெற்றியுடன் தொடங்கினார்.
லண்டன்,

‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘குயர்டன்’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்கொண்டார். இதில் அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த சீசனில் அவரது 50-வது வெற்றி இதுவாகும்.


ஜோகோவிச்சின் அதிரடியான ஷாட்டுகளை போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் மற்றும் மகனுடன் வந்து நேரில் கண்டுகளித்தார். ரொனால்டோ போன்ற நட்சத்திரங்கள் டென்னிசுக்கு ரசிகராக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதே போல் பல போட்டிகளை அவர் நேரில் வந்து பார்த்து இருப்பதாகவும் ஜோகோவிச் குறிப்பிட்டார். ஜோகோவிச் தனது 2-வது லீக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) இன்று சந்திக்கிறார்.

‘ஹெவிட்’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6-1, 6-0 என்ற நேர் செட்டில் நிஷிகோரியை (ஜப்பான்) பந்தாடினார். 2-வது வெற்றியை சுவைத்த ஆண்டர்சனுக்கு அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதலிடத்தில் நீடிப்பு
உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
2. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3. இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா வெளியேற்றம்
இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஒசாகா ஆகியோர் வெளியேறினர்.