டென்னிஸ்

ஏ.டி.பி. டென்னிஸ்: டொமினிக்கை வீழ்த்தினார் பெடரர் + "||" + ATP Tennis: Federer defeated Dominic

ஏ.டி.பி. டென்னிஸ்: டொமினிக்கை வீழ்த்தினார் பெடரர்

ஏ.டி.பி. டென்னிஸ்: டொமினிக்கை வீழ்த்தினார் பெடரர்
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில், டொமினிக்கை வீழ்த்தி பெடரர் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.
லண்டன்,

‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘ஹெவிட்’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். தொடக்க ஆட்டத்தில் ஜப்பானின் நிஷிகோரியிடம் தோற்று இருந்த பெடரர் அடுத்து தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.


‘குயர்டன்’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை சாய்த்து 2-வது வெற்றியை பெற்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: மும்பையை வீழ்த்தியது பெங்கால்
புரோ கபடி போட்டியில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி வெற்றிபெற்றது.
2. 2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை
2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
3. புரோ கபடி: புனேயை வீழ்த்தியது மும்பை
புரோ கபடி போட்டியில், மும்பை அணி புனேயை வீழ்த்தியது.
4. இந்திய அணியிடம் தோற்றதால் தற்கொலை செய்ய நினைத்தேன் - பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆர்தர் தகவல்
இந்திய அணியிடம் தோற்றதால் தற்கொலை செய்ய நினைத்ததாக, பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆர்தர் தெரிவித்தார்.
5. பொறுப்புணர்வுடன் செயல்படாதது தோல்விக்கு காரணம் - தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபிளிஸ்சிஸ் வேதனை
நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படாதது தோல்விக்கு காரணம் என்று தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் வேதனை தெரிவித்தார்.