டென்னிஸ்

ஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி + "||" + ATP Tennis: Shock defeat Federer in the semi-finals

ஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி

ஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின், அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
லண்டன்,

டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச்(செர்பியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

நேற்று நடந்த முதலாவது அரைஇறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர், 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்தித்தார். 1 மணி 35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 5-7, 6-7 (5-7) என்ற நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வேரேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.