டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அமெரிக்க வீரரை சந்திக்கிறார், குணேஸ்வரன் + "||" + maharashtra open Tennis: Meet the American player in the first round, Kuneswaran

மராட்டிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அமெரிக்க வீரரை சந்திக்கிறார், குணேஸ்வரன்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அமெரிக்க வீரரை சந்திக்கிறார், குணேஸ்வரன்
மராட்டிய ஓபன் டென்னிஸின் முதல் சுற்று ஆட்டத்தில், தமிழக விரர் குணேஸ்வரன் அமெரிக்க வீரரை சந்திக்கிறார்.
புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் ஜனவரி 5-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், நடப்பு சாம்பியனான பிரான்சின் ஜிலெஸ் சிமோன் ஆகியோருக்கு ‘பை’ சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுவார்கள்.

இந்திய இளம் வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் மைக்கேல் மோவை சந்திக்கிறார். மற்றொரு தமிழக வீரர் ராம்குமாருக்கு முதல் சுற்று கடினமாக அமைந்துள்ளது. அவர் 97-ம் நிலை வீரரான மார்செல் கிரானோலர்சுடன் (ஸ்பெயின்) மல்லுகட்டுகிறார். இரட்டையர் பிரிவில் போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ள இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி, ராடு அல்போட் (மால்டோவா)- மாலெக் ஜாஸிரி (துனிசியா) இணையை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், மெக்சிகோவின் மிக்யூல் ஏஞ்சல் ரியேசுடன் கைகோர்த்து களம் காணுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வியடைந்தார்.
2. மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளது.
3. மராட்டிய ஓபன் டென்னிஸ்: குரோஷிய வீரர் மரின் சிலிச் விலகல்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், குரோஷிய வீரர் மரின் சிலிச் விலகினார்.
4. சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வி
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றிபெற்றார்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. முதல் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.