டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி + "||" + Maharashtra Open Tennis: Indian player Gunasevaran's defeat

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வியடைந்தார்.
புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் களம் இறங்கிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மைக்கேல் மோவிடம் தோற்று வெளியேறினார். குணேஸ்வரனின் சவால் 1 மணி 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்டீவ் டார்சிஸ் (பெல்ஜியம்) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ராபர்ட்டா கார்பலெசை (ஸ்பெயின்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.


இரட்டையர் பிரிவில் இந்தியாவின் புராவ் ராஜா-ராம்குமார், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்- அமெரிக்காவின் நிகோலஸ் மோன்ரோ ஆகிய ஜோடிகள் தங்களது முதல் சுற்றில் தோற்று ஏமாற்றம் அளித்தன.