டென்னிஸ்

டேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண் + "||" + Davis returns to the Indian team, Divij Sharan

டேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண்

டேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் தகுதி சுற்று போட்டிக்காக, திவிஜ் சரண் இந்திய அணிக்கு திரும்புகிறார்.
புனே,

டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி, இத்தாலியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிப்ரவரி 1 மற்றும் 2-ந்தேதிகளில் கொல்கத்தாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை ரோகித் ராஜ்பால் தலைமையிலான புதிய தேர்வு கமிட்டி நேற்று தேர்வு செய்து அறிவித்தது. இதில் ஆசிய விளையாட்டு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற திவிஜ் சரண், 2012-ம் ஆண்டுக்கு பிறகு டேவிஸ் கோப்பை போட்டிக்கு திரும்புகிறார். கால் முட்டி காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் யுகி பாம்ப்ரியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. ரோகன் போபண்ணா, பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார், சகெத் மைனெனி ஆகியோர் அணியில் தொடருகிறார்கள். மாற்று வீரர் இடத்தில் சசிகுமார் முகுந்த் வைக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி கழற்றி விடப்பட்டு இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் தொடருகிறது. பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
2. துளிகள்
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த இளம் வீரர் பிரித்வி ஷா கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து விலகினார்.
3. பெர்த் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பு, வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவை
பெர்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவைப்படுகிறது.
4. ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் 6-வது வெற்றி
ஆஸ்திரேலியாவில் 45-வது டெஸ்டில் ஆடிய இந்திய அணிக்கு இது 6-வது வெற்றியாகும்.
5. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன?
இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.