டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் போபண்ணா ஜோடி பெயஸ் இணையை வீழ்த்தியது + "||" + Semi-final Bopanna pair Bees collapsed the compound

மராட்டிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் போபண்ணா ஜோடி பெயஸ் இணையை வீழ்த்தியது

மராட்டிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் போபண்ணா ஜோடி பெயஸ் இணையை வீழ்த்தியது
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.

புனே,

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 6–வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6–3, 6–3 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ஜாமி முனாரை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிஸ் 7–5, 6–2 என்ற நேர் செட்டில் மாலெக் ஜாஸிரியை (துனிசியா) விரட்டியடித்தார். குரோஷிய வீரர் இவோ கார்லோவிச் தன்னை எதிர்த்த எர்னஸ்ட்ஸ் குல்பிசை (லாத்வியா) 7–6 (5), 7–6 (5) என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் 2–வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 7–6 (6) 6–7 (5), 3–6 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஜாஸிரியிடம் வீழ்ந்தார். இத்துடன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

அதே சமயம் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா–திவிஜ் சரண் ஜோடி 6–7 (4–7), 6–4, 17–15 என்ற செட் கணக்கில் லியாண்டர் பெயஸ் (இந்தியா), மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ் (மெக்சியா) இணையை வெளியேற்றி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. 6 முறை ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தப்பித்த போபண்ணா கூட்டணி இந்த வெற்றியை பெற 1 மணி 45 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. ‘இது போன்ற மிகவும் நெருக்கமான போட்டியை ஒரு போதும் விளையாடியதில்லை’ என்று வெற்றிக்கு பிறகு போபண்ணா கூறினார்.