டென்னிஸ்

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ் + "||" + Serena Williams beats world No.1 Simona Halep to reach Australian Open last 8

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்-பை (ருமேனியா) எதிர்க்கொண்டார்.  சிமோனா ஹாலெப்-செரீனா வில்லியம்ஸ் பலப்பரீட்சை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இருவரும் மோதிய ஆட்டத்தால் மைதானத்தில் அனல் பறந்தது என்றே சொல்லலாம். அதிரடி, ஆவேசத்துடன் களமிறங்கிய செரீனா வில்லியமஸ் 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை தனதாக்கினார். பின்னர் இண்டாவது செட் ஹாலெப் வசம் சென்றது. இதனையடுத்து ஆட்டம் வெற்றியை நிர்ணயம் செய்யும் மூன்றாவது செட்டிற்கு சென்றது. இதிலும் இருவருக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. ஆனால் வெற்றி செரீனாவிற்கு சென்றது. 6-4 என்று செட்டை கைப்பற்றிய செரீனா போட்டியை வசப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

கடந்த வருடம்  செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்றுக்கொண்ட காரணத்தால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடவில்லை. குழந்தை பிறந்த பின்னர் அவர் விளையாட தொடங்கினார். பிரஞ்சு ஓபன் டென்னிஸ், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளில் இறுதிப்போட்டியை எட்டவில்லை. இப்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.