டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கிவிடோவாவை வீழ்த்தி ஒசாகா பட்டம் வென்றார் + "||" + Naomi Osaka beats Petra Kvitova to clinch Australian Open 2019 title

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கிவிடோவாவை வீழ்த்தி ஒசாகா பட்டம் வென்றார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கிவிடோவாவை வீழ்த்தி ஒசாகா பட்டம் வென்றார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார்.
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு),  ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்க்கொண்டார். 1991-ம் ஆண்டு ஜானா நவோட்னாவுக்கு பிறகு இங்கு இறுதிப்போட்டிக்கு வந்த முதல் செக்குடியரசு வீராங்கனை என்ற சிறப்புடன் களமிறங்கினார் கிவிடோவா. உலக தரவரிசையில் 4-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான ஜப்பானின் நவோமி ஒசாகா, ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் ருசிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் களம் கண்டார். ஆட்டம் தொடங்கியதும் வேகத்தில் அனல் பறந்தது. முதல் செட் உனக்கா? எனக்கா என்பதில் இருவர் இடையேயும் கடும் போராட்டம் நிலவியது. இறுதியில் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ஒசாகா.

இதனையடுத்து இரண்டாவது செட்டில் கிவிடோவா ஆதிக்கம் செலுத்தினார். இருவருக்கும் இடையிலான போட்டியில் கிவிடோவா கை உயர்ந்தது. போராடி செட்டை 5-7 என்ற கணக்கில் தன்வசமாக்கினார் கிவிடோவா. ஆட்டம் வெற்றியை நிர்ணயம் செய்யும் மூன்றாவது செட்டை நோக்கி சென்றது. இதில் கிவிடோவாவை ஆதிக்கம் செலுத்த ஒசாகா விடவில்லை. இருவருக்கு இடையேயும் போட்டி நிலவினாலும் 6-4 என்ற கணக்கில் ஆட்டத்தை முடித்து ஒசாகா வெற்றியை தனதாக்கினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் தனதாக்கினார். 

2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் அபாரம் காட்டிய ஒசாகா, உலக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.