டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார் + "||" + Novak Djokovic swats away Rafael Nadal for seventh Australian Open title

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்று சாதனைப் படைத்தார்.‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்தது. 
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 6 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2–ம் நிலை வீரரும், 2009–ம் ஆண்டு சாம்பியனுமான ரபெல் நடாலும் (ஸ்பெயின்) மோதினர்.

வலிமைவாய்ந்த வீரர்கள் மல்லுகட்டியதால்  மோதல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் அபாரம் காட்டினார். 2 மணி நேரம் 4 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் 6-3, 6-2, 6-3 என்ற கணக்கில்  வெற்றியை ஜோகோவிச் தனதாக்கினார். இதன் மூலம் 7 வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.