டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர்கள் ராம்குமார், குணேஸ்வரன் தோல்வி + "||" + Davis Cup Tennis: Indian players Ramkumar and Gunasewaran fail

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர்கள் ராம்குமார், குணேஸ்வரன் தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர்கள் ராம்குமார், குணேஸ்வரன் தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர்கள் ராம்குமார், குணேஸ்வரன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
கொல்கத்தா,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா-இத்தாலி அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் நடந்த இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ராம்குமார் 4-6, 2-6 என்ற நேர் செட்டில் இத்தாலி வீரர் ஆன்ட்ரியாஸ் செப்பியிடம் பணிந்தார். மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 4-6, 3-6 என்ற நேர் செட்டில் இத்தாலி வீரர் பெர்ரெட்டினியிடம் தோல்வி கண்டார். இதன் மூலம் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.


இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் (இந்தியா) ஜோடி, சிமோன் போலேலி- செச்சினடோ (இத்தாலி) இணையை சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்-ஆன்ட்ரியாஸ் செப்பி, ராம்குமார்-பெர்ரெட்டினி ஆகியோர் மோதுகிறார்கள். இன்று நடைபெறும் 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே டேவிஸ் கோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேற முடியும்.