டென்னிஸ்

டேவிஸ் கோப்பை இரட்டையர் டென்னிஸ் போட்டி; இந்திய இணை வெற்றி + "||" + Rohan Bopanna-Divij Sharan duo win for India to keep Davis Cup hope alive

டேவிஸ் கோப்பை இரட்டையர் டென்னிஸ் போட்டி; இந்திய இணை வெற்றி

டேவிஸ் கோப்பை இரட்டையர் டென்னிஸ் போட்டி; இந்திய இணை வெற்றி
டேவிஸ் கோப்பை இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் இணை வெற்றி பெற்று பதக்க நம்பிக்கையை தக்க வைத்துள்ளனர்.
டேவிஸ் கோப்பை இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் இணையானது மேட்டியோ பெர்ரெட்டினி மற்றும் சிமோன் போலெல்லி இணையை எதிர்த்து இன்று விளையாடினர்.

இந்த போட்டியில் இந்திய இணை 4-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.  இதனால் இந்தியாவின் நம்பிக்கை தக்க வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் இத்தாலி நாட்டின் ஆண்ட்ரியாஸ் செப்பியை எதிர்த்து விளையாடினார்.  ஆனால் இந்த போட்டியில், 6-1, 6-4 என்ற செட் கணக்கில் பிரஜ்னேஷை வீழ்த்தி செப்பி வெற்றி பெற்றார்.  முதல் 2 ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் மற்றும் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.