டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலியிடம் வீழ்ந்தது இந்தியா + "||" + Davis Cup tennis: India fell to Italy

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலியிடம் வீழ்ந்தது இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலியிடம் வீழ்ந்தது இந்தியா
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இத்தாலியிடம் இந்தியா அணி தோல்வி அடைந்தது.
கொல்கத்தா,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா-இத்தாலி அணிகள் மோதிய ஆட்டம் கொல்கத்தாவில் நடந்தது. முதல் நாளில் நடந்த இரண்டு ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோர் தோல்வி கண்டனர். இதனால் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் (இந்தியா) ஜோடி 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சிமோன் போலேலி- பெர்ரெட்டினி (இத்தாலி) இணையை வீழ்த்தியது. அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஆன்ட்ரியாஸ் செப்பி 6-1, 6-4 என்ற நேர்செட்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனை சாய்த்தார். இதன் மூலம் இத்தாலி அணி 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி மாட்ரிட்டில் நவம்பர் மாதம் நடைபெறும் பிரதான சுற்றுக்கு முன்னேறியது. பிரதான சுற்று வாய்ப்பை இழந்த இந்திய அணி அடுத்து ஆசிய மண்டல போட்டியில் விளையாடும்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது
நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.
2. பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜனதா 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
3. நெல்லை தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது: ஞானதிரவியம் (தி.மு.க.) - 5,22,623 மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.)-3,37,166
நெல்லை தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் 5,22,623 ஓட்டுகளும், அ.தி.மு.க. வேட்பாளர் 3,37,166 வாக்குகளும் பெற்றனர்.
4. கரூர் தொகுதியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தோல்வி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 2½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எச்.வசந்தகுமார் அமோக வெற்றி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 2½ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.