‘இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானில் விளையாடும்’ - சட்டர்ஜீ


‘இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானில் விளையாடும்’ - சட்டர்ஜீ
x
தினத்தந்தி 7 Feb 2019 10:43 PM GMT (Updated: 7 Feb 2019 10:43 PM GMT)

இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானில் விளையாடும் என சட்டர்ஜீ தெரிவித்தார்.

கொல்கத்தா,

அகில இந்திய டென்னிஸ் சங்க பொதுச் செயலாளர் ஹிரோன்மோ சட்டர்ஜீ நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர்களது இடத்தில் விளையாடும் வகையில் நமக்கு போட்டி அட்டவணை அமைந்துள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று நம்புகிறேன். அங்கு சென்று விளையாடாவிட்டால் நமது அணி 2 ஆண்டு தடையை சந்திக்க நேரிடும். பாகிஸ்தான் ஆக்கி அணி ஒடிசா வந்து உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஆடியது. அதே போல் நாங்களும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவோம்’ என்றார். 1964-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story