டென்னிஸ்

முதல் 20 இடத்துக்குள் முன்னேற வேண்டும் - சரத்கமல் + "||" + Let's move forward to the top 20 - Sarath Kamal

முதல் 20 இடத்துக்குள் முன்னேற வேண்டும் - சரத்கமல்

முதல் 20 இடத்துக்குள் முன்னேற வேண்டும் - சரத்கமல்
இந்திய முன்னணி டேபிள் டென்னிஸ் வீரராக சென்னையைச் சேர்ந்த சரத்கமல் உலக தரவரிசையில் தற்போது 33-வது இடத்தில் இருக்கிறார்.
ந்திய முன்னணி டேபிள் டென்னிஸ் வீரராக சென்னையைச் சேர்ந்த சரத்கமல் உலக தரவரிசையில் தற்போது 33-வது இடத்தில் இருக்கிறார். அவர் நேற்று மும்பையில் அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டுக்குள் தரவரிசையில் டாப்-20 இடத்திற்குள் முன்னேற வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட இலக்கு. அடுத்த கட்ட மிகப்பெரிய லட்சியம் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி தான்.

ஆசிய விளையாட்டில் நாங்கள் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தோம். ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிசில் 60 ஆண்டுகளில் முதல்முறையாக பதக்கத்தை பெற்று இருக்கிறோம். இந்த பதக்கங்கள், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி மிகவும் சவால் மிக்கது. அதில் பதக்கம் வெல்ல முடிகிறது என்றால், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வது நீண்ட தூரத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்’ என்றார்.