டென்னிஸ்

டென்னிஸ் தரவரிசையில் பெடரர் முன்னேற்றம் + "||" + Federer progress in the tennis rankings

டென்னிஸ் தரவரிசையில் பெடரர் முன்னேற்றம்

டென்னிஸ் தரவரிசையில் பெடரர் முன்னேற்றம்
டென்னிஸ் தரவரிசையில் ரோஜர் பெடரர் முன்னேறி உள்ளார்.
நியூயார்க்,

சர்வதேச டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டாப்-3 இடங்களில் மாற்றம் இல்லை. முதலிடத்தில் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-வது இடத்தில் ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 3-வது இடத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி) உள்ளனர். துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகுடம் சூடி தனது சாம்பியன்ஷிப் பட்ட எண்ணிக்கையை 100-ஆக உயர்த்திய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இதே போட்டியில் இறுதி ஆட்டத்தில் தோற்ற கிரீஸ் வீரர் 20 வயதான ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்திற்கு வந்துள்ளார். இதன் மூலம் டாப்-10 இடத்திற்குள் நுழைந்த முதல் கிரீஸ் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் நவோமி ஒசாகா (ஜப்பான்) முதலிடத்திலும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-வது இடத்திலும், பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 3-வது இடத்திலும் உள்ளனர்.