டென்னிஸ்

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் வெற்றி + "||" + Indiyanvels Tennis: Serena Williams wins

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் வெற்றி

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் வெற்றி
இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இன்டியன்வெல்ஸ், 

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2–வது சுற்றில் களம் இறங்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7–5, 6–3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். அஸரென்காவுக்கு எதிராக 22–வது முறையாக மோதிய செரீனா அதில் ருசித்த 18–வது வெற்றி இதுவாகும். செரீனா 3–வது சுற்றில் மற்றொரு முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜாவுடன்(ஸ்பெயின்) மோத வேண்டி உள்ளது. 2–ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–2, 6–4 என்ற நேர் செட்டில் பார்போரா ஸ்டிரிகோவாவை (செக்குடியரசு) விரட்டினார். ஸ்விடோலினா (உக்ரைன்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோரும் தங்களது 2–வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, தகுதி நிலை வீரர் இங்கிலாந்தின் டேனியல் இவான்சை எதிர்கொண்டார். இதில் வாவ்ரிங்கா 6–7(4), 6–3, 6–3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி கண்டார்.