இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா வெளியேற்றம்


இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா வெளியேற்றம்
x
தினத்தந்தி 13 March 2019 10:15 PM GMT (Updated: 13 March 2019 10:07 PM GMT)

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஒசாகா ஆகியோர் வெளியேறினர்.

இன்டியன்வெல்ஸ்,

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 39-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரீபரை சந்தித்தார். மழையால் பாதிக்கப்பட்டு மறுநாளில் தொடர்ந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 4-6 என்ற நேர்செட்டில் கோல்ஸ்கிரீபரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். ஜோகோவிச்சிடம் தொடர்ச்சியாக 11 முறை தோல்வி கண்ட கோல்ஸ்கிரீபர் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 3-6, 1-6 என்ற நேர்செட்டில் பெலின்டா பென்சிச்சிடம் (சுவிட்சர்லாந்து) வீழ்ந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் மகுடம் சூடிய பிறகு ஒசாகா சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.


Next Story