டென்னிஸ்

இன்டியன்வெல்ஸ் டென்னிசில் நடால், பெடரர் கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + Indienwells tennis Nadal, Federer progress to quarter finals

இன்டியன்வெல்ஸ் டென்னிசில் நடால், பெடரர் கால்இறுதிக்கு முன்னேற்றம்

இன்டியன்வெல்ஸ் டென்னிசில் நடால், பெடரர் கால்இறுதிக்கு முன்னேற்றம்
இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
இன்டியன்வெல்ஸ்,

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 3 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் கிராஜ்னோவிச்சை (செர்பியா) தோற்கடித்து கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.


மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் கரன் கச்சனோவ் 6-4, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கால்இறுதியில் கரன் கச்சனோவ், ரபெல் நடாலை சந்திக்கிறார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீரரான கைல் எட்முன்டை (இங்கிலாந்து) விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி நேரமே தேவைப்பட்டது.

மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் கோல்ஸ்கிரீபரையும் (ஜெர்மனி), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் கார்லோவிச்சையும் (குரோஷியா), கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-4, 6-3 என்ற செட்டில் ஜான் லினார்ட் ஸ்டிரப்பையும் (ஜெர்மனி), போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (7-3), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் டேனிஸ் ஷபலோவையும் (கனடா) தோற்கடித்து கால்இறுதியை எட்டினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 0-6, 1-6 என்ற நேர்செட்டில் 20 வயதான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 52 நிமிடம் நடந்தது.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் மார்கெடா வோன்ட்ரோசோவாவை (செக் குடியரசு) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. விம்பிள்டன் போட்டி தரவரிசையில் பெடரருக்கு 2-வது இடம்
விம்பிள்டன் போட்டி தரவரிசையில் பெடரருக்கு 2-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
2. இத்தாலி ஓபன் டென்னிஸ்: பெடரர், நவோமி ஒசாகா காயத்தால் விலகல்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக கால்இறுதி ஆட்டத்தில் இருந்து ரோஜர் பெடரர், நவோமி ஒசாகா ஆகியோர் விலகினார்கள்.