டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்: ரோஜர் பெடரர் தோல்வி + "||" + Indian Wells: Dominic Thiem beats Roger Federer to win title

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்: ரோஜர் பெடரர் தோல்வி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்:  ரோஜர் பெடரர் தோல்வி
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் தோல்வி அடைந்துள்ளார்.
இந்தியன் வெல்ஸ்,

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடந்தன.  இதில், ஆடவர் பிரிவு இறுதி போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம் மற்றும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விளையாடினர்.

உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள பெடரர், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.  ஆனால் தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் 2வது செட்டில் 6-3 என்ற கணக்கில் தீம் வெற்றி பெற்றார்.

இதனால் 3வது செட்டிற்கான ஆட்டத்தில், சாம்பியன் பட்டத்தினை வெல்வது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.  இதில், 7-5 என்ற கணக்கில் அதிரடியாக விளையாடி டோமினிக் தீம் வெற்றி பெற்றுள்ளார்.  அவர் முதன்முறையாக இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றி உள்ளார்.

இதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஏஞ்செலிக் கெர்பர் மற்றும் பியான்கா ஆண்ட்ரீஸ்கு விளையாடினர்.  இதில் உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள கெர்பரை, 4-6, 6-3 மற்றும் 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பியான்கா வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய கூடைப்பந்து: தமிழக அணி தோல்வி
தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி தோல்வியடைந்தது.
2. நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி
நாகர்கோவிலில் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
3. நஷ்டஈடு வழக்கில் தோல்வி: ‘இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கிவிட்டோம்’ - இஷான் மணி தகவல்
நஷ்டஈடு வழக்கில் தோல்வி தொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கிவிட்டோம் என இஷான் மணி தெரிவித்துள்ளார்.
4. கடைசி போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றி
கடைசி போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றிபெற்றது.
5. ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஜப்பானை வீழ்த்தி கத்தார் சாம்பியன் பட்டம் வென்றது.