டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் ராம்குமார் தோல்வி + "||" + Miami Open Tennis: Rama Kumar fails in the qualifying round

மியாமி ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் ராம்குமார் தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் ராம்குமார் தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில் ராம்குமார் தோல்வியடைந்தார்.
மியாமி,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நடந்த தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த ராம்குமார் 4-6, 1-6 என்ற நேர் செட்டில் இத்தாலியின் லோரென்ஜோ சோனிகோவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு தகுதி சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அட்ரியன் மெனன்டேஸ் மாசெரியாசை (ஸ்பெயின்) வீழ்த்தினார். தகுதி சுற்றின் 2-வது ரவுண்டிலும் குணேஸ்வரன் வெற்றி பெற்றால் பிரதான சுற்றுக்குள் நுழைவார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்தியா-ரஷியா
ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்திய அணி, ரஷியாவுடன் மோத உள்ளது.