டென்னிஸ்

மியாமி டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா + "||" + Miami Tennis In the 3rd round Jokovic, Serena

மியாமி டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா

மியாமி டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-2), 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெர்னர்ட் தாமிக்கை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-0, 6-7 (3), 6-1 என்ற செட் கணக்கில் விக்மேயரை (பெல்ஜியம்) போராடி வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் ரெபக்கா பீட்டர்சனையும் (சுவீடன்), ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் டெய்லர் டவுன்சென்டையும் (அமெரிக்கா) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர். வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.