டென்னிஸ்

மியாமி டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அதிர்ச்சி தோல்வி + "||" + Miami Tennis Osaka, Gerber Shock failure

மியாமி டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அதிர்ச்சி தோல்வி

மியாமி டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அதிர்ச்சி தோல்வி
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
மியாமி,

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரர் ராடு அல்போட்டை (மால்டோவா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் டேவிட் பெரர் 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு (ஜெர்மனி) அதிர்ச்சி அளித்தார். கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் தங்களது ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஜப்பானின் நவோமி ஒசாகா 3-வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டார். அவரை தரவரிசையில் 27-வது இடம் வகிக்கும் சீனதைபே வீராங்கனை ஹிசை சு-வெய் 4-6, 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4-6, 6-4, 1-6 என்ற செட் கணக்கில் கனடா இளம் புயல் பியன்கா ஆன்ட்ரீஸ்குவிடம் வீழ்ந்தார். இதற்கிடையே 8 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இடது கால்முட்டி காயம் காரணமாக 3-வது சுற்றில் களம் இறங்குவதற்கு முன்பே விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்
ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பானில் இருந்து டெல்லி புறப்பட்டார்.