டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி + "||" + Miami Open Tennis Tournament Jokovich's shock in the 4th round failed

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4–வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மியாமி, 

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4–வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட்டை சந்தித்தார்.

2 மணி 29 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஜோகோவிச் 6–1, 5–7, 3–6 என்ற செட் கணக்கில் பாவ்டிஸ்டா அகுட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த சீசனில் பாவ்டிஸ்டா அகுட், ஜோகோவிச்சை சாய்த்து இருப்பது இது 2–வது முறையாகும்.

கால்இறுதியில் ஜான் இஸ்னர்

மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 7–5, 7–5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 51 நிமிடம் நடந்தது. இன்னொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜான் இஸ்னர் (அமெரிக்கா) 7–6 (7–5), 7–6 (7–3) என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்டை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ஜான் இஸ்னர், பாவ்டிஸ்டா அகுட்டுடன் மோதுகிறார்.

மற்ற ஆட்டங்களில் டெனிஸ் ‌ஷபோவாலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா), பிரான்சஸ் டியாபோ (அமெரிக்கா), பெலிக்ஸ் அகெர் (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.

கிவிடோவா வெளியேற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11–வது இடத்தில் உள்ள ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 2 மணி 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு 7–6 (8–6), 3–6, 6–2 என்ற செட் கணக்கில் 2–ம் நிலை வீராங்கனையான கிவிடோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். ஆஷ்லிக் பார்டி, கிவிடோவாவை தோற்கடித்தது இதுவே முதல்முறையாகும்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் 3–6, 6–2, 7–5 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஹிசை சு வெய்யை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.