டென்னிஸ்

மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் 3–வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Montcorro tennis Ribel Nadal Progress to the 3rd round

மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் 3–வது சுற்றுக்கு முன்னேற்றம்

மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் 3–வது சுற்றுக்கு முன்னேற்றம்
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

மான்ட்கார்லோ, 

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் நேரடியாக களம் கண்ட உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–1, 6–1 என்ற நேர்செட்டில் 22–ம் நிலை வீரரான சக நாட்டை சேர்ந்த பாவ்டிஸ்டா அகுட்டை எளிதில் தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6–1, 6–4 என்ற நேர்செட்டில் கனடா வீரர் பெலிக்ஸ் அலியாசிமை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.