டென்னிஸ்

மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி + "||" + Mantkarlo Tennis: Semi-final Natal shock failed

மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி

மான்ட்கார்லோ டென்னிஸ்: அரைஇறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

மான்ட்கார்லோ, 

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 2–ம் நிலை வீரரும், 11 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 18–ம் நிலை வீரரான இத்தாலியின் பாபியோ போக்னினி 6–4, 6–2 என்ற நேர் செட்டில் வெளியேற்றினார். மற்றொரு அரைஇறுதியில் செர்பிய வீரர் துசான் லாஜோவிச் 7–5, 6–1 என்ற நேர் செட்டில் டேனில் மெட்விடெவை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.