டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா 3–வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Madrid Open Tennis Naomi Osaka improved to the 3rd round

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா 3–வது சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா 3–வது சுற்றுக்கு முன்னேற்றம்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 7–6 (7–5), 3–6, 6–0 என்ற செட் கணக்கில் ஸ்பெயினை சேர்ந்த வைல்டு கார்டு வாய்ப்பு பெற்ற வீராங்கனை சோரிப்ஸ் டோர்மோவை தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 7–5, 6–1 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவை வீழ்த்தி 3–வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6–4, 6–2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை தோற்கடித்து 3–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.