டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + Madrid Open Tennis Simona Hallep progression to Calvin

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.
மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 6-0 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீராங்கனை விக்டோரியா குஸ்மோவாவை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிமோனா ஹாலெப்க்கு 44 நிமிடம் தேவைப்பட்டது. 2 முறை சாம்பியனான சிமோனா ஹாலெப் கடந்த 6 ஆண்டுகளில் 5-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்து இருக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பெலாரஸ் வீராங்கனை அலிக்சான்ட்ரா சாஸ்னோவிச்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டி, நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.